/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பராமரிப்பின்றி காவலர் குடியிருப்பு
/
பராமரிப்பின்றி காவலர் குடியிருப்பு
ADDED : ஜன 23, 2024 05:14 AM

விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி காவலர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள புதர்களால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தனித்தனியாக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்புகளும், அடுக்குமாடிகளாக இதர காவலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இந்த காவலர் குடியிருப்புகளைச் சுற்றிலும், பின் பகுதியிலும் காலியாக உள்ள இடங்களில் முட்புதர்களும், செடி, கொடிகளும் சூழ்ந்து பெரும் புதர்களாக உள்ளது. நீண்டகாலமாக பராமரிக்காமல் விட்டுள்ளதால், முட்செடிகள், மரங்கள் அடர்ந்து இரண்டாவது மாடி வரை வளர்ந்து குடியிருப்பை சூழ்ந்துள்ளது.
புதர் மண்டிய இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் காவலர் குடியிருப்பு பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் உலவி வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
குடியிருப்பை காவல் துறையின் வீட்டு வசதி வாரியம் பராமரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. காவல் துறை உயர் அதிகாரிகளாவது இதனை கண்காணித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

