/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றம்; கண்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் தனசேகரன் பெருமிதம்
/
2 ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றம்; கண்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் தனசேகரன் பெருமிதம்
2 ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றம்; கண்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் தனசேகரன் பெருமிதம்
2 ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றம்; கண்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் தனசேகரன் பெருமிதம்
ADDED : ஜன 19, 2024 07:36 AM

கோலியனுார் ஒன்றியம், கண்டம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் வியக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் வழிகாட்டுதலோடு, கலெக்டர், கூடுதல் கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை மேற்பார்வையில், கடந்த 2 ஆண்டுகளில், எங்கள் ஊராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, லட்சுமணன் எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதி 26.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்டம்பாக்கம், கண்டம்பாக்கம் காலனி, திருப்பச்சாவடிமேடு கிராமங்களில் புதிய குடிநீர் திட்ட போர்வெல்கள், ஊராட்சி நிதி 42.75 லட்சத்தில் குடிநீர் பைப் லைன்கள், பொது நிதி 40.70 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகள்.
ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு 24 லட்சத்தில் புதிய வகுப்பறைகள். நான் முதல்வன் திட்டத்தில் 63 லட்சத்தில் புதிய தார்ச்சாலைகள்,
என்.ஆர்.ஜி.ஏ., திட்டத்தில் 99.50 லட்சத்தில் சிமென்ட் சாலைகள். 85 லட்சத்தில் ஜல்லி சாலைகள், 6.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 70 லட்சத்தில், நீர்வரத்து வாய்க்கால்களில் 13 தடுப் பணைகள். ௧௦ லட்சத்தில் 2 கல்வெர்ட்டுகள், திருப்பச்சாவடிமேடு அரசு பள்ளிக்கு 3.40 லட்சத்தில் சுற்றுச்சுவர், 3 கிராமங்களிலும் 8.25 லட்சத்தில் மினி கழிவறைகள், வாய்க்கால்களில் 3.50 லட்சத்தில் 5 நீர் உறிஞ்சு குழிகள், 20 லட்சத்தில் காவலர் குடியிருப்பு புதிய தார்ச்சாலை என பல பணிகள் முடிக்கப்பட் டுள்ளன.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை, தானிய களங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கலைஞர் கிராமமாக தேர்வாகியதால், வேளாண்துறை சார்பில் 600 தென்னை, 1,500 பழமரக் கன்றுகள், மூங்கில் கன்றுகள், பன விதைகள் நடப்பட்டுள்ளன.
கடந்த 1927ம் ஆண்டில் கட்டிய தொடக்கப் பள்ளி, தாட்கோ மூலம் சிறப்பு பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
ஊராட்சி தலைவர் முயற்சியில், 2 கி.மீ.,க்கு, வாய்க்கால் வெட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
பி.டி.ஓ.,க்கள், துணைத் தலைவர், உறுப்பினர்கள், மக்கள் ஒத்துழைப்போடு, குறுகிய 2 ஆண்டுகளில், ஊராட்சிக்கான பல மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளது.
இவ்வாறு தனசேகரன் கூறினார்.

