/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் ஆய்வக கட்டடம் திறப்பு
/
அரசு கல்லுாரியில் ஆய்வக கட்டடம் திறப்பு
ADDED : ஜன 23, 2024 10:29 PM
திண்டிவனம் : திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் ஆய்வக கட்டட திறப்பு விழா நடந்தது.
கட்டடத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கல்லுாரியில் அமைச்சர் மஸ்தான், குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் வெங்கடேசன், தி.மு.க.,மாவட்ட அவைத் தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

