ADDED : ஜன 21, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அங்கராயநல்லுார் கிராமத்தில் பா.ஜ., சார்பில் மத்திய அரசின் காப்பீட்டு திட்ட பதிவு முகாம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏழுமலை தலைமை தாங்கி பதிவு நகலை பொது மக்களுக்கு வழங்கினார். தண்டபாணி முன்னிலை வகித்தார்.
நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் தங்கராமு, பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சரவணன், நிர்வாகிகள் தண்டபாணி, சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.

