/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொசப்பாளையம் கிராம மக்கள் கிராம சபையை புறக்கணிக்க முடிவு
/
கொசப்பாளையம் கிராம மக்கள் கிராம சபையை புறக்கணிக்க முடிவு
கொசப்பாளையம் கிராம மக்கள் கிராம சபையை புறக்கணிக்க முடிவு
கொசப்பாளையம் கிராம மக்கள் கிராம சபையை புறக்கணிக்க முடிவு
ADDED : ஜன 24, 2024 04:21 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கொசப்பாளையம் கிராம மக்கள், பொது சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம சபையை புறக்கணிப்போம் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு திரண்டு வந்த கிராம மக்கள், கலெக்டர் பழனியிடம் அளித்த மனு:
திருக்குணம் ஊராட்சி கொசப்பாளையம் ஏரியில், கடந்தாண்டு ஜனவரி 28ல் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கலெக்டர் பழனி தலைமையில், 2 அமைச்சர்கள் 5,000 மரக்கன்றுகளை நட்டனர். சில சமூக விரோகிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள், அதனை ஆடு, மாடுகளை விட்டு தொடர்ந்து அழித்து வருகிறார்கள்.
இது குறித்து கஞ்சனுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து சமாதானம் பேசி அனுப்பினர்.
தொடர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்ந்ததால், பிரச்னை ஏற்பட்டு, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகத்திலும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஒரு முறை கூட ஆக்கிரமித்து தகராறு செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. இடையே ஊர் திருவிழாவுக்காக, அங்கிருந்த பொது தென்னை மரங்களில் தேங்காய் பறித்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள், ஊராட்சி தலைவர் பிரகாஷ் மற்றும் பொது மக்களை தாக்கினர்.
இதனால், அந்த பகுதியில் பொது சொத்தினை பாதுகாக்கவும், பல ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்கவும், ஊரக வளர்ச்சித்துறை உறுதியளித்தபடி வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இதனை செய்யாவிட்டால், வரும் 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா கிராம சபை கூட்டத்தை, ஊராட்சி மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

