ADDED : ஜன 23, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி தனியார் பஸ் மோதி இறந்தார்.
கடலுார் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே அற்பிச்சம்பாளையம் கிராமத்தில் சாலையைக் கடந்த போது கடலுார் - விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

