/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அழைப்பிதழில் அமைச்சர் பெயர் 'மிஸ்சிங்' நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் முறையீடு
/
அழைப்பிதழில் அமைச்சர் பெயர் 'மிஸ்சிங்' நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் முறையீடு
அழைப்பிதழில் அமைச்சர் பெயர் 'மிஸ்சிங்' நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் முறையீடு
அழைப்பிதழில் அமைச்சர் பெயர் 'மிஸ்சிங்' நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் முறையீடு
ADDED : ஜன 23, 2024 11:35 PM

விழுப்புரம் : அமைச்சரின் பெயர் அழைப்பிதழில் விடுபட்டதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதியை சந்தித்து வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமாவை நேற்று சந்தித்தனர். பின், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடாசலம், நிருபர்களிடம் கூறியதாவது:
நாளை 25ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில், தலைமை நீதிபதி பங்கேற்கிறார்.
இதற்கான அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பெயர் விடுபட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின் படி, தலைமை நீதிபதி பங்கேற்கும் விழாக்களில், கட்டாயமாக சட்டத்துறை அமைச்சரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள், மாவட்ட நீதிபதியை சந்தித்து கூறினோம். விழா நேரம் நெருங்கியதாலும், அழைப்பிதழ் வழங்கப்பட்டு விட்டதால் எங்களை ஐகோர்ட் செல்லுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயரை சேர்ப்பதோடு, அவரை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நீதிமன்றம் திறப்பு விழாவை, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

