/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாகன ஓட்டுநர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வாகன ஓட்டுநர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 21, 2024 04:33 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.
செயலாளர் வீரப்பன், கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் லோகநாதன் கண்டன உரையாற்றினர்.
வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹிட் அண்டு ரன் என்ற மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். விபத்துகளை தவிர்க்க பொது மக்களிடமும் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சாலை விதிகளை தவிர்ப்பது குறித்து, விளம்பரங்களை அரசு அதிகளவில் செய்ய வேண்டும். வாகனங்களுக்கு லோடு ஏற்றும், இறக்கும் இடங்களில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

