/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் தேசிய வாக்களர் தினம்
/
கண்டாச்சிபுரத்தில் தேசிய வாக்களர் தினம்
ADDED : ஜன 27, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் தாசில்தார் கற்பகம் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின ஊர்வலத்திற்கு தாசில்தார் கற்பகம் தலைமை தாங்கினார். முகையூர் ஆர்.ஐ பானுப்பிரியா முன்னிலை வகித்தார். கண்டாச்சிபுரம் வி.ஏ.ஓ பிரசாத்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாச்சியர் கணேசன் முன்னிலையில் வாக்காளர்உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் தாலுகா அலுவலக ஊழியர்கள், மகளிர் சுயுதவிக்குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

