/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏர் ஹாரன்கள் குறித்த சோதனையில் அதிகாரிகள்...அலட்சியம்; கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
ஏர் ஹாரன்கள் குறித்த சோதனையில் அதிகாரிகள்...அலட்சியம்; கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஏர் ஹாரன்கள் குறித்த சோதனையில் அதிகாரிகள்...அலட்சியம்; கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஏர் ஹாரன்கள் குறித்த சோதனையில் அதிகாரிகள்...அலட்சியம்; கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 25, 2025 10:04 PM

விழுப்புரத்தில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் காற்று ஒலிப்பான்களால் (ஏர் ஹாரன்) பொதுமக்கள் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைப்படி அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் தாறுமாறாக செல்கிறது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதில்லை. இருவருக்கு மேல் அமர்ந்து செல்வதோடு, உரிமம் பெறாமலே பலரும் இரு சக்க வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். மேலும், மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் போக்குவரத்து வாகன விதிமுறைகளை சிறிதும் கூட கடைபிடிக்காமல் செல்வதால், மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
விதிமுறை மீறல்களில் முக்கியமான ஒன்று ஏர் ஹாரன். பல வாகனங்களில் இருந்து வெளியேறும் சத்தம் அதிகமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிர்ந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலும் நகர பகுதிகளில் இயங்கும் பஸ்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த ஏர் ஹாரன்களை அரசு தடை செய்து உத்தரவிட்டாலும், பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, இரு சக்கரம் மற்றும் இலகு ரககனரக வாகனங்களிலும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக ஹாரன்களின் ஒலி அளவு 60 முதல் 90 டெசிபல் அளவு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களில் இருந்து வெளியேறும் சத்தம் 90 முதல் 120 டெசிபல் வரை உள்ளது. மனிதனின் காதுகள் அதிகபட்சமாக 90 டெசிபல் சத்தத்தை கேட்கும் திறன் கொண்டதாகும். தொடர்ச்சியாக, 100 முதல் 120 டெசிபல் சத்தம் கேட்கும் போது, காதுகளின் உட்பகுதியில் உள்ள செவிப்பறை செயலிழந்து போகும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குழந்தைகள், கர்ப்பணிகளை பெரிதும் பாதிக்கிறது. கருசேர்ந்து சில தினங்களான பெண்கள், 2வது மாதத்தில் கருவை சுமப்போருக்கு, ஏர் ஹாரன் சத்தத்தால் கரு கலைந்து போகும் என மகப்பேறு டாக்டர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் காதுகளில் இது போன்ற சத்தம் கேட்கும் பட்சத்தில், அவர்களின் மூளை செயல்திறன் குறைந்து போகவும், தற்காலிக செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக குழந்தை நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியே பெயரளவுக்கு எப்போதாவது திடீரென சோதனை நடத்தி அபராதம் மட்டும் விதிக்கின்றனர்.
இந்த ஏர் ஹாரன்களால் ஏற்படும் ஒலிச்சிதைவில் பாதிக்கும் முதல் நபர், அதை பயன்படுத்தும் டிரைவர் தான்.
தொடர்ச்சியாக ஏற்படும் ஏர் ஹாரன் சத்தத்தால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். துாக்கமின்மை, ரத்தகொதிப்பு உட்பட பல பிரச்னைகளும் ஏற்படுகிறது.
டிரைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் பாதிப்பதால் விதிமுறை மீறி வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்கன் பறிமுதல் செய்வதை அதிகாரிகள் கடமையாக கொள்ளாமல் பணியாக மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நமது நிருபர்-