/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி தலைவரிடம் மனு..
/
அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி தலைவரிடம் மனு..
ADDED : பிப் 02, 2024 03:53 AM

வானுார்: பட்டானுார், கலைவாணர் நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பட்டானுார், கலைவாணர் நகர் நலச் சங்கத் தலைவர் குணசேகரன், செயலாளர் சிவசுப்ரமணியன் தலைமையில் அப்பகுதி மக்கள், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசனிடம் அளித்துள்ள மனு:
புதுச்சேரி - தமிழக எல்லையையொட்டி கலைவாணர் நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.
ஆனால், இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் கிடையாது. அத்தியாவசிய தேவைகளான குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் இன்றியும், தரமான சாலைகள் இல்லாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம்.
சாதாரண கிராமங்களில் கிடைக்கும் தரமான சுகாதார நிலையம், ஈமச்சடங்கு மண்டபம், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட வசதிகள் கூட கிடையாது.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூலம், தவறாமல் ஆண்டு தோறும் வீட்டு வரி, குடிநீர் வரி, மனை வரன்முறை கட்டணம், வீடு கட்டுதலுக்கான ஒப்புதல் கட்டணம், தொழில்வரி என அனைத்து வரிகளும் செலுத்துகிறோம்.
ஆனால், 50 ஆண்டுகள், கடந்தும் இதுவரை இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுடன், குடிநீர் பற்றாக்குறையை சீர் செய்ய இரண்டு ஆழ்துளை கிணறுகளை புனரமைத்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தரமான சாலை வசதி மற்றும் சுடுகாடு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

