/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 05:04 AM

திண்டிவனம், : திண்டிவனம் ரோஷணை (இந்து) நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தன.
விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், சிலம்பம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தில்ஷாத் பேகம் முன்னிலை வகித்தார். நண்பர்கள் அரிமா சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மெகராஜ் பேகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வானுார்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவியர்கள் மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் தலைமை தாங்கி, பொங்கல் பண்டிகை முக்கியத்துவம் குறித்தும், கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
தமிழ்த்துறைத் தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.
விழுப்புரம்
பேரணியில் உள்ள துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கி, வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி கூறினார். முதல்வர் டேவிட் சவுந்தர், தமிழர்களின் பண்பாடுகள், கலாசாரம் பற்றி விளக்கமளித்தார்.
விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் அசோகன், தமிழர் திருநாள் சிறப்புகள் மற்றும் வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.
அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் இ.எஸ்., கல்விக்குழுமம் சார்பில் நடந்த விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சமுதாய பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, கல்லுாரி நிர்வாக தலைவர் செல்வமணி, முதல்வர்கள் இந்திரா, ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மயிலம்
கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் சுதா கிருஷ்டி ஜாய், துணை முதல்வர் சேகர் தலைமையில் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடந்தன. கல்லுாரி நிறுவனர் ஜாஸ்லின் தம்பி, செயலாளர் பிரபல ஜே ரோஸ், நிர்வாக துண இயக்குனர் ஆல்பினா ஜாஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர்.

