நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, : செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் சீருடை மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் தலைமை தாங்கி, அனைவருக்கும் சீருடை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். செயல் அலுவலர் செந்தில்குமார், துாய்மைப் பணி ஆய்வாளர் பார்கவி, பணி மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

