/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருத்தி அமைக்கப்பட்ட தாட்கோ திட்டங்கள்; பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
/
திருத்தி அமைக்கப்பட்ட தாட்கோ திட்டங்கள்; பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
திருத்தி அமைக்கப்பட்ட தாட்கோ திட்டங்கள்; பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
திருத்தி அமைக்கப்பட்ட தாட்கோ திட்டங்கள்; பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை
ADDED : ஜன 19, 2024 07:32 AM
விழுப்புரம் : தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்கள், தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதை, மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனிசெய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி சட்டசபையில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், 'தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் பொருட்டு, தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
இதன் தொடச்சியாக, பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'முதலமைச்சரின் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்' பெயரில், 40 கோடி ரூபாய் செலவினத்தில், புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.
இப்புதிய திட்டத்தின்படி ஆதிதிராவிடர்களுக்கான தனி நபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானிய மாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக 3.50 லட்சம் ரூபாய், இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் மற்றும் பழங் குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
இவற்றில் எது குறைவா னதோ அத்தொகையை மானியமாகவும் 6 சதவீதம் வட்டி மானியத்தினை வங்கிகளிடமிருந்து பெற்று, திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெற தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை, விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

