/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
23 இடங்களில் இன்று ஆற்றுத் திருவிழா: பாதுகாப்புப் பணியில் 700 போலீசார்

ADDED : ஜன 19, 2024 07:39 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் இன்று ஆற்று திருவிழா நடக்கிறது. 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தை பொங்கல் விழாவின் நிறைவாக ஆற்றுத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆறுகள், பொழுதுபோக்கு இடங்களில் குடும்பத்தோடு சென்று, புனித நீராடியும், விளையாடியும் மகிழ்வர்.
அந்தந்த கிராமங்களில் இருந்து, கோவில்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் ஆறுகளில் தீர்த்தவாரி நடைபெறும்.
தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அடுத்த பிடாகம், அத்தியூர், பேரங்கியூர், எல்லீஸ் சத்திரம், சின்னகள்ளிப்பட்டு, கலிஞ்சிக்குப்பம், அண்ராயநல்லுார், அரகண்டநல்லுார், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், பம்பை ஆற்றில் அய்யூர்அகரம், வீடூர் அணை உட்பட 23 இடங்களில், பொது மக்கள் ஆறுகளில் திரண்டு வந்து, காலை முதல் மாலை வரை திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆற்றுத் திருவிழாவையொட்டி, எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில் 1 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.,க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 60 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 700 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.