/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா
/
இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 05:53 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த எண்ணாயிரம் இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி விழாவைத் துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன் வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசிரவி துரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, பி.டி.ஓ., க்கள் சுமதி, முபாரக் அலி பேக், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், சமூகநல தாசில்தார் ரகுராமன், வி.ஏ.ஓ., சரத் யாதவ், ஊராட்சி தலைவர் வீரம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

