/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லஞ்ச வழக்கில் கைதான துப்புரவு ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
/
லஞ்ச வழக்கில் கைதான துப்புரவு ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
லஞ்ச வழக்கில் கைதான துப்புரவு ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
லஞ்ச வழக்கில் கைதான துப்புரவு ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 26, 2025 05:38 AM
விழுப்புரம்,: விழுப்புரம், காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 58; கட்டட தொழிலாளி. இவரது தந்தை அபிமன்னன் கடந்த 2016ம் ஆண்டு இறந்தார்.
அவரது இறப்பு சான்றிதழ் பெற, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் காத்தமுத்து விண்ணப்பித்தார்.
சான்றிதழ் வழங்க நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதன்குமார், 40; லஞ்சமாக 10 ஆயிரம் ரூபாய் கேட்டார். லஞ்ச பணத்தை காத்தமுத்து கொடுத்தபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதன்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, துப்புரவு ஆய்வாளர் மதன்குமாரை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.