நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இளைஞர் நற்பணி மன்றத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் கலைச் செல்வி தலைமை தாங்கினார்.
நற்பணி மன்ற தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். நிர்வாகி திருவேங்கடம் வரவேற்றார்.
விக்கிரவாண்டி பி.டி.ஓ., சுமதி குளக்கரையில் அத்தி, இலுப்பை, கரிபலா, நெல்லி, நாவல், கலாக்காய் உள்ளிட்ட பல மரக்கன்றுகளை நட்டு அடர் தோப்பு அமைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி செயலாளர் பூங்கொடி, ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, கிராம பிரமுகர்கள் சுப்ரமணி, கணேசன், வெங்கடேசன், உட்பட பலர் பங்கேற்றனர்.

