/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 27, 2024 12:49 AM
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.
பயிற்சி வகுப்பில் நேர்மை ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிறுவனர் குறளமுதன் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு வேலை மற்றும் தொழில் சார்ந்த வாய்ப்புகள், வழிவகைகள், தேவையான திறன் அடைவுகள் கூறித்து விளக்கம் அளித்தார்.
எஸ்.ஆர்.எம்., நிறுவனர் ரங்கநாதன் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை திறன் சார்ந்த சந்தேகங்களை விளக்கினார்.
தொடர்ந்து, இன்றைய சமூகம் இணையத்தில் வளர்கிறதா, வீழ்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

