/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாதிரி மகளிர் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி
/
மாதிரி மகளிர் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி
ADDED : ஜன 23, 2024 10:28 PM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தவும், தமிழ் இலக்கண, இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும், தமிழ்க் கூடல் நிகழ்வை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்றார்.
வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கி, மாவட்டத்தின் தொன்மை சிறப்புகள், தமிழின் வரலாறு, தமிழ் இலக்கண, இலக்கியங்களை மாணவிகள் வாசிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வளர்மதி வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழரசி தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மாலா ராணி நன்றி கூறினார்.

