/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
/
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
ADDED : ஜன 14, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : தளவானுாார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞர் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சுப்ரமணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் செல்வராணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அனிதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாரதி முன்னிலை வகித்தனர். சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர அருணகிரி, பட்டதாரி ஆசிரியர் நடராஜன் சிறப்புரையாற்றினர்.
ஆசிரியர்கள் முத்து கிருஷ்ணவேனி, கஸ்துாரி திலகம் ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். ஆசிரியர் கலையரசி வாழ்த்திப் பேசினார்.
ஆசிரியை சுஜாதா நன்றி கூறினார்.

