/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளிடமிருந்து 387 மெட்ரிக் டன் உளுந்து விதை கொள்முதல் செய்ய இலக்கு
/
விவசாயிகளிடமிருந்து 387 மெட்ரிக் டன் உளுந்து விதை கொள்முதல் செய்ய இலக்கு
விவசாயிகளிடமிருந்து 387 மெட்ரிக் டன் உளுந்து விதை கொள்முதல் செய்ய இலக்கு
விவசாயிகளிடமிருந்து 387 மெட்ரிக் டன் உளுந்து விதை கொள்முதல் செய்ய இலக்கு
ADDED : ஜன 19, 2024 07:33 AM

வானுார் : விழுப்புரம் மாவட்டத்திற்கு அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்திட 387 மெட்ரிக் டென்கள் உளுந்து கொள்முதல் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வானுார் தாலுகாவில் உளுந்து விதைப்பண்ணை 70 எக்டேரில் அமைக்கப்பட்டு, 33 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நல்லாவூரில் கந்தசாமி விவசாய நிலத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட உளுந்து வம்பன் 10 ரக விதைப் பண்ணையை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் பார்வையிட்டார்.
அப்போது, 25 அல்லது 35 நாட்களில் உள்ள உளுந்து பயிருக்கு, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிடைக்கும் பயிறு ஒன்டர் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கி பூஸ்டரை தெளிக்க அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பிரதான பயிராக உளுந்து 40 ஆயிரம் எக்டர் பரப்பளவில் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவிற்கு, அரசு ஆண்டுதோறும் மாவட்டத்தில் உள்ள 30 வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கி வருகிறது.
இந்த விதைகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையின் கீழ் (டான்சிடா) கொள்முதல் செய்யப்பட்டு விதைப் பண்ணை விவசாயிகளுக்கு விதைக்கான கிரயத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக புதுக்கோட்டையில் உள்ள வம்பன் பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட உளுந்து வம்பன் 8, 10 ,11 ரங்களை, 850 எக்டேரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு, 387 மெட்ரிக் டன்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
ஆய்வின் போது வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர் வாசமூர்த்தி உடனிருந்தனர்.

