ADDED : ஜன 21, 2024 04:40 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் லாரி டிரைவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம், நாகர்பிந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்பகதுார், 32; லாரி டிரைவர். ராஜஸ்தான் அடுத்த மாங்குளி குர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்துகிஷோர் மகன் கைலாஷ்ஷேனி, 27; இருவரும் கன்டெய்னர் லாரியில் கர்நாடகா மாநிலம், கோலாரியில் இருந்து, விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள தனியார் நிறுவன ஷோரூமுக்கு நேற்று முன்தினம் இருசக்கர வாகனங்கள் லோடு ஏற்றி வந்தனர்.
அங்கு, டிபன் சாப்பிடுவதற்காக கைலாஷ்ஷேனி, லாரியை எடுக்கும்படி கூறி யுள்ளார். இதற்கு ராஜ்பகதுார், 'நடந்து போய் சாப்பிட்டு வா' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைலாஷ்ஷேனி, லாரி டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கைலாஷ்ஷேனியை கைது செய்தனர்.

