sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி  விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது

/

'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி  விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி  விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி  விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது


ADDED : செப் 20, 2025 07:02 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : 'தினமலர்' நாளிதழ் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத் தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும்'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது.

'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள்பெற, விஜயதசமி திருநாளில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியை நடத்துகிறது.

கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில்,உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்துபிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை' ஆரம்பித்து, வைக்கும் சிறந்த தருணமிது.

விழுப்புரம், மாம்பழப் பட்டு ரோடு, வ.பாளை யம், சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் வரும் அக்., 2ம் தேதி வியாழக்கிழமை, காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்த குழந்தைகள் மட் டுமே பங்கேற்க முடியும்.

தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத் துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தை களுக்கும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.

கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை முன்பதிவு செய்து அழைத்து வாருங்கள்.

முன்பதிவு செய்யும் முறை

இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகளை, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யலாம். இதற்கு, 95247 81197 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர் மற்றும் முகவரியை குறுஞ்செய்தி அனுப்பி, முன்பதிவு செய்யவும்.








      Dinamalar
      Follow us