/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது
/
இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது
ADDED : ஜன 21, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 51; இவரது மனைவி சத்தியவதி, 42; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மாயவன் மகன்கள் குபேந்திரன், 50; மணிகண்டன், 39; குபேந்திரன் மனைவி அறிவழகி, 42; மகன் அகிலன், 22; இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டு மனை அளப்பதில் முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் குபேந்திரன் உட்பட நால்வரும் திருநாவுக்கரசை திட்டினர். இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 11 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து அகிலன், மணிகண்டன், திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர்.

