/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவண்ணாமலை கிரிவலம் - சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
திருவண்ணாமலை கிரிவலம் - சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 24, 2024 04:21 AM
விழுப்புரம் : திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று நடைபெறும் கிரிவலத்தையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலக செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 24 மற்றும் நாளை 25ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து 250, விழுப்புரம் 35, புதுச்சேரி 15, கடலுார் 15, பண்ருட்டி 15, திருக்கோவிலுார் 15, கள்ளக்குறிச்சி 5, வேலுார் 20, திருப்பத்துார் 15, ஆரணி 20, காஞ்சிபுரம் 20 என, அந்தந்த ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும், தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலுார், காஞ்சி புரம், திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் //www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, சிறப்பு பஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுமுறையை முடித்து, பொது மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல 28 மற்றும் 29ம் தேதிகளில் 250 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

