/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாரம்பரிய நெல் சோதனை அறுவடை; வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
/
பாரம்பரிய நெல் சோதனை அறுவடை; வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
பாரம்பரிய நெல் சோதனை அறுவடை; வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
பாரம்பரிய நெல் சோதனை அறுவடை; வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஜன 19, 2024 07:38 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே நெல் ஜெயராமன் மரபுசார் நெல் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் நடப்பட்டு விளைந்த நெல் சோதனை அறுவடையை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுதும் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் இந்த ஆண்டு 15 ஏக்கர் பரப்பளவில் அந்துார் கிச்சலி சம்பா, சிவன் சம்பா, சீரகசம்பா போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள பாரம்பரிய நெல்களை வேளாண் துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அறுவடை செய்த பின்னர் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் நெல்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, பண்ணை மேலாளர் கவிப்பிரியன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

