/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணிக்கு பயிற்சி
/
தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணிக்கு பயிற்சி
ADDED : ஜன 14, 2024 05:57 AM

விழுப்புரம், : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். காணொலி காட்சி மூலம் நடந்த பயிற்சி வகுப்பில் அமைச்சர் உதயநிதி, நிர்வாகிகளுக்கு பயிற்சி தொடர்பான ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மகளிரணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், பாலாஜி, புஷ்பராஜ், சசிரேகா பிரபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

