/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்று இடத்தில் வீட்டுமனை திருநங்கைகள் மனு
/
மாற்று இடத்தில் வீட்டுமனை திருநங்கைகள் மனு
ADDED : ஜூன் 25, 2025 02:33 AM

விழுப்புரம் : திருநங்கைகள் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, மனு கொடுத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
விழுப்புரம் தாலுகா சாணிமேடுகுப்பம் கிராமத்தில் திருநங்கைகள் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் வீடுகட்டி வாழ்வதற்கு தகுதியற்ற இடம். தனி தீவு போன்று உள்ளதால், வீடு கட்டி வசிக்க முடியாது. வேறு ஒரு இடத்தில் வீட்டுமனை வழங்கக்கோரி தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். நாங்கள் மனு கொடுத்த பின் 3 கலெக்டர்கள், தாசில்தார்கள் மாறி விட்டனர்.
எனவே, எங்களுக்கு வீடுகட்டி குடியிருக்க வசதியாக தகுதியான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.