ADDED : ஜன 23, 2024 10:34 PM

வானுார் : கிளியனுார் அருகே பிளாஸ்டிக் தயாரிக்கும் பொருட்களை ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு நேற்று காலை 6:00 மணிக்கு, மினி வேன் பிளாஸ்டிக் தயாரிக்கும் பொருட்களை ஏற்றிச் சென்றது. வேனை, விழுப்புரம் அடுத்த கருங்காளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அன்பு மகன் சந்தானபாண்டியன், 23; ஓட்டினார்.
வேன், புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் கீழ்கூத்தப்பாக்கம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியன் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானபாண்டியன் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் கவிழ்ந்த வேனை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

