ADDED : ஜன 14, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : நெகனுார் கிராமத்தில் இளைஞர் குழு சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா நடந்தது.
அதனையொட்டி, விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.
பெற்றோரை இழந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 20 பேருக்கு எழுது பொருள் தொகுப்பு, துாய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசமும், இளைஞர்களுக்கு ராமகிருஷ்ண விஜயம் புத்தகமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சித்ரா ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கவுன்சிலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் தம்பிராஜா வரவேற்றார்.
தலைமை ஆசிரியர்கள் இந்திரா, உமாராணி, தமிழ் ஆசிரியர் சுமன், செயலாளர் தாமோதரன், உறுப்பினர் சிலம்பரசன், தன்னர்வலர்கள், இளைஞர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

