/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் பா.ம.க., கவுன்சிலர் பெருமிதம்
/
நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் பா.ம.க., கவுன்சிலர் பெருமிதம்
நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் பா.ம.க., கவுன்சிலர் பெருமிதம்
நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் பா.ம.க., கவுன்சிலர் பெருமிதம்
ADDED : ஜன 19, 2024 07:39 AM

வா ர்டில் 45 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 62 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என திண்டிவனம் நகராட்சி 31வது வார்டு பா.ம.க., கவுன்சிலர் மணிகண்டன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும், கூறியதாவது:
வார்டு முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையை, 14 லட்சம் ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது.
இதேபோல் 1 லட்சம் ரூபாய் செலவில் ராஜன் நகரில் கல்வெட்டு வால்பாலம், பிள்ளையார் கோவில் தெருவில் 5 லட்சம் ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், முருகன் கோவில் தெருவில் 4.60 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் ரோடு போடப்பட உள்ளது.
அரசு நிதி மூலம் பூதேரி கிணற்றிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேஸ்ட்டிங் பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி துவங்க உள்ளது. வார்டு பகுதியில் 80 சதவீதம் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம், அன்புமணி எம்.பி., நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் செலவில் ஈஸ்டன் தோப்பில் விரைவில் ஹைமாஸ் அமைக்கப்பட உள்ளது.
வார்டைச் சேர்ந்த 45 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 62 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வார்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்கபள்ளி கொண்டு வருவது, மினி பஸ் வசதி, கோட்டை மேடு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் எல்.இ.டி., விளக்குகள் போடப்பட உள்ளன.
இவ்வாறு கவுன்சிலர் மணிகண்டன் தெரிவித்தார்.

