ADDED : ஜன 21, 2024 04:42 AM

திண்டிவனம்: சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக வந்த முன்னாள் முதல்வருக்கு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநாவலுார் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் செண்பகவேல் இல்ல திருமணம் வரவேற்பில் பங்கேற்க சென்னையிலிருந்து வானுாருக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி காரில் வந்தார்.
அவருக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் நேற்று மாலை 6:15 மணிக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் மத்திய அமைச்சர் ராமசந்திரன், வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் முத்தமிழ்ச்செல்வன், பிரபு, அழகுவேல்பாபு, வையாபுரி மணிகண்டன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தம், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட பாசறை செயலா ளர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், விஜயன், சேகரன், சுரேஷ்பாபு, கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மன், பன்னீர், நகர செயலாளர் பசுபதி, ஜெ., பேரவை நிர்வாகிகள் வடபழனி, விஜயகுமார், ரூபன்ராஜ், மகளிர் அணி தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

