/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏழுமலை பாலிடெக்னிக்கில் மண்டல கபடி போட்டி
/
ஏழுமலை பாலிடெக்னிக்கில் மண்டல கபடி போட்டி
ADDED : பிப் 01, 2024 11:37 PM

விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நாகை, புதுச்சேரி மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது.
இந்த போட்டியில், நாகை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 பாலிடெக்னிக் கல்லுாரிகள் பங்கேற்றன. இதில், முதலிடத்தை புத்துார் எஸ்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி பிடித்து கோப்பையை வென்றது. 2வது இடத்தை கடலுார் கிருஷ்ணசாமி பாலிடெக்னிக் கல்லுாரி பிடித்தது.
போட்டியில் வென்ற அணிகளுக்கு இ.எஸ்., கல்விக்குழுமத் தலைவர் செல்வமணி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். ஏற்பாடுகளை விளையாட்டு துறை ஆசிரியர் தமிழ்செல்வன், பிரவீண்ராஜ் ஆகியோர் செய்தனர்.

