/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--விருதுநகர்--தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி தீவிரம்
/
--விருதுநகர்--தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி தீவிரம்
--விருதுநகர்--தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி தீவிரம்
--விருதுநகர்--தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : ஜன 21, 2024 03:06 AM

ராஜபாளையம்,: விருதுநகர் - தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கும் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர்- -தென்காசி ரயில் வழித்தடத்தில் தற்போது பயணிகள் ரயில்களின் வேகம் அதிகபட்சமாக 100 கி. மீ.,ஆக இயக்கப்பட்டு வருகின்றன இந்த வேகத்தை மணிக்கு 110 கி.மீ., உயர்த்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
வேகத்தை கூட்டுவதற்காக பழைய தண்டவாளங்கள் மாற்றப்பட்டு, அதிவேகத்தை தாங்கும் திறன் கொண்ட பலமான மேம்படுத்தப்பட்ட தண்டவளங்களை பொருத்துவது,அடித்தள மண்ணை பலப்படுத்துவது, அதிர்வுகளை தாங்க ஜல்லிக்கற்களை கூடுதலாக இடுவது, வளைவுகளை சற்று நேராக்குவது, மனித, விலங்குகள் குறுக்கீடுகள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன் ரயில் நிலைய லுாப் லைன் பிளாட்பார வேகம் மணிக்கு 15 கி.மீ., ஆக இருந்ததை தற்போது 30 கி.மீ., ஆக மாற்றும் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. இவ்வகையில் ராஜபாளையம், சிவகாசி ரயில் நிலைய பிளாட்பார வேகம் மணிக்கு 30 கி.மீ., ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பகுதியில் புனலுார் கொல்லம்ரயில் பிரிவில் தற்போது அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ., இதை மணிக்கு 80 கி.மீ.,-ஆக உயர்த்தப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் வழித்தடமான விருதுநகர்- மதுரை -சென்னை வழித்தட பயணிகள் ரயில்கள் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த பாதையும் இனி மணிக்கு 130 கி.மீ., அதிவேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இது குறித்து ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க பொருளாளர் ஜெகத் சங்கர் கூறுகையில், ரயில் பாதை, பிளாட்பார பாதை வேகங்கள் அதிகப்படுத்துவதன் விளைவாக விருதுநகர்- தென்காசி ரயில் வழித்தட ரயில்களின் பயண நேரம் 15 முதல் 40 நிமிடங்கள் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பயண நேரம் மிச்சப்படுத்தப்பட்டு பயணிகள் பெரிதும் பயனடைவர், என்றார்.

