/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
15.55 லட்சம் பேர் * இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு * அதிகபட்சமாக ஸ்ரீவி.,யில் 2.33 லட்சம் பேர்
/
15.55 லட்சம் பேர் * இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு * அதிகபட்சமாக ஸ்ரீவி.,யில் 2.33 லட்சம் பேர்
15.55 லட்சம் பேர் * இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு * அதிகபட்சமாக ஸ்ரீவி.,யில் 2.33 லட்சம் பேர்
15.55 லட்சம் பேர் * இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு * அதிகபட்சமாக ஸ்ரீவி.,யில் 2.33 லட்சம் பேர்
ADDED : ஜன 23, 2024 04:03 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 15 லட்சத்து 55 ஆயிரத்து 186 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்துாரில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 098 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டார்.
2024 ஜன. 1ஐ தகுதி நாளாகக் கொண்டு 2023 அக். 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு பின் அக். 27 முதல் டிச. 9 வரை நடந்த சிறப்பு திருத்த முகாம்கள் மூலம் 33 ஆயிரத்து 819 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் படி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 55 ஆயிரத்து 186. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 848, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 95 ஆயிரத்து 104, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 234 ஆகும். அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 098 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் பிழைகள் ஏதுமின்றி சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், பெயர் விடுபட்டவர்கள் தங்களை பெயரை சேர்க்க படிவம் 6ல் உடனடியாக விண்ணபிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
..................
சட்டசபை தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விபரம் வ.எண்/ சட்டசபை தொகுதி/ ஆண்/ பெண்/ இதரர்/ மொத்தம்1 / ராஜபாளையம்/ 1,08,161/ 1,12,701/ 31/ 2,20,8932 / ஸ்ரீவில்லிபுத்தூர்/ 1,13,572/ 1,19,490/ 36/ 2,33,0983 / சாத்துார்/ 1,11,981/ 1,17,797/ 59/ 2,29,8374 / சிவகாசி/ 1,12,921/ 1,18,048/ 28/ 2,30,9975 / விருதுநகர்/ 1,05,213/ 1,10,269/ 47/ 2,15,5296 / அருப்புக்கோட்டை/ 1,04,414/ 1,10,427/ 20/ 2,14,8617 / திருச்சுழி/ 1,03,586/ 1,06,372/ 13/ 2,09,971மொத்தம் 7,59,848/ 7,95,104/ 234/ 15,55,186

