/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
/
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
ADDED : ஜன 22, 2024 11:28 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் செந்தில்குமாரை கொலை செய்ததாக வரிச்சியூர் செல்வம் மீதான வழக்கில் திருச்சி, சென்னையை சேர்ந்த இருவர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் 38, 2021ல் மாயமானார். அவரது மனைவி முருக லட்சுமி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
போலீசார் விசாரித்தினர். அவரை சென்னையில் ஒரு கும்பல் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
ஏ.எஸ்.பி., காரத் ஹருண் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். செந்தில் குமாரை கொலை செய்ததாக மதுரை வரிச்சூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் 36, சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த விசுவாச தேஜ் 31, நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.