/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 05:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம் நீதிமன்றங்களிலும் நேற்று நடந்தது.
இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை, வங்கி வாராக் கடன்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உட்பட 6 ஆயிரத்து 637 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கபட்டு, அதில் 3 ஆயிரத்து 198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 9 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 83க்கு உத்தரவிடப்பட்டது.
மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, கோதையம்மாளுக்கு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையாக சமரச முறையில் பேசி முடிவெடுக்கபட்டு, அதற்கான உத்தரவு நகலினை கூடுதல் மாவட்ட நீதிபதி மணி வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.