/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் 395 அரசு பஸ்கள் இயக்கம்
/
மாவட்டத்தில் 395 அரசு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 09, 2024 11:58 PM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்தும் 395 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் 1, 2, காரியப்பட்டி, வத்தராயிருப்பு என மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது.
இந்த பணிமனைகளில் இருந்து மாவட்டம் முழுவதும் 418 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்தனர். இதனால் பல மாவட்டங்களில் அரசு பஸ் இயங்கவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நேற்று மதியம் 2:00 மணி நிலவரப்படி விருதுநகர் 69, சாத்துார் 47, அருப்புக்கோட்டை 65, சிவகாசி 58, ஸ்ரீவில்லிப்புத்துார் 43, ராஜபாளையம் 148, ராஜபாளையம் 29, காரியப்பட்டி 20, வத்தராயிருப்பு 16 என மொத்தம் 395 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
மொத்த எண்ணிக்கையில் 94.5 சதவிகித பஸ்கள் இயக்கப்பட்டதாக மாவட்ட போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

