/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அச்சம்
/
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அச்சம்
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அச்சம்
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அச்சம்
ADDED : மார் 26, 2025 05:30 AM
சாத்துார், : சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
மெயின் ரோடு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பழைய படந்தால் ரோடு பகுதிகளில் பசுமாடுகள் தனியாக உலா வருகின்றன. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் , தொழிலாளர்கள் என பலரும் கடந்து செல்லும் நிலையில் ரோட்டில் உலா வரும் கால்நடைகள் அங்கும் இங்கும் உலா வரும்போது வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
கால்நடைகளை மீறி ரோட்டில் உலாவ விடும் உரிமையாளர்களுக்கு நகராட்சி அபராதம் விதிக்கும் என்ற எச்சரிக்கையை மீறியும் பலர் கால்நடைகளை ரோட்டில் உலாவ விட்டுள்ளனர். ரோட்டில் உலா வரும் கால்நடைகளை நகராட்சி பறிமுதல் செய்து கோசலைகளில் விட்டால் மட்டுமே இதற்கு முடிவு வரும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.