/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொருந்தாத விதைகள் விற்றால் நடவடிக்கை
/
பொருந்தாத விதைகள் விற்றால் நடவடிக்கை
ADDED : ஜன 23, 2024 04:07 AM
விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாவட்டத்தில் நெல் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு தனியார் விதை விற்பானையாளர்கள் சான்று, உற்பத்தியாளர் அட்டைகள் உள்ள விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனையாளர்கள் விதைகளை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின் தான் விற்பனை செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப கோடைக்காலத்திற்கு தகுந்த நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பருவத்திற்கு பொருந்தாத வெளிமாநில விதைகளை விற்கும் விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய நெல் ரகங்களை வாங்கும் முன்பு வேளாண்துறை, விதைச்சான்று துறை அலுவலரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். விதை வாங்கும் போது விற்பனை ரசீதில் குவியல் எண், காலாவதி நாள் இருக்கிறதா என பார்த்து கொள்ள வேண்டும், என்றார்.

