/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக சிறப்பு நிகழ்ச்சி
/
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக சிறப்பு நிகழ்ச்சி
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக சிறப்பு நிகழ்ச்சி
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக சிறப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 23, 2024 04:00 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் தேசபந்து மைதானத்தில் எல்.இ.டி., திரையில் அயோத்தி ராமர் கோயில் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அர்ச்னை அரிசிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அயோத்தி ராமர் பூஜை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பா.ஜ., ஆன்மிகப்பிரிவு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஹேமலதா அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று தேசபந்து மைதானத்தில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஸ்டை நிகழ்ச்சிகள் எல்.இ.டி., திரையில் நேரடியாக ஒளிப்பரப்பட்டு, அயோத்தி ராமர் கோயில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அர்ச்சனை அரிசிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., கிழக்கு மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், ஆன்மிகப்பிரிவு மாவட்டத்தலைவர் சுப்புராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

