/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படுமோசமான ரோடு, சேதமடைந்த வார்டன் குடியிருப்பு
/
படுமோசமான ரோடு, சேதமடைந்த வார்டன் குடியிருப்பு
ADDED : ஜன 14, 2024 04:55 AM

காரியாபட்டி : வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமான நந்திக்குண்டு ரோடு, ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் ஏற்படும் இடர்பாடுகள், விஷ பூச்சிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வார்டன் குடியிருப்பு உள்ளிட்டவற்றால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணரிலிருந்து 3.5 கி.மீ., தூரத்தில் உள்ள நந்திக்குண்டு கிராமத்திற்கு செல்லும் ரோடு படு மோசமாக உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் இந்த ரோடு போடப்பட்டது. தற்போது குண்டும் குழியுமாகி வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் இடறி விழுகின்றனர்.
இப்பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளன. கனரக வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இங்குள்ள பெண்கள் விடுதி வளாகத்தில் உள்ள வார்டன் குடியிருப்பு சேதமடைந்தன. பல ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடப்பில் உள்ளன. புழக்கம் இல்லாததால் விஷ பூச்சிகள் தங்கி வருகின்றன.
கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனை சரிவர மூடாததால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. சூரம்பட்டியில் கட்டப்பட்ட குளியலறை பயன்பாடு இன்றி கிடக்கிறது. மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனர்.

