நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாநிலத் துணைத் தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, மாவட்ட தலைவர் விமல் ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குருசாமி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட செயலாளர் மாயன் ரமேஷ் பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

