ADDED : ஜன 14, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துாரில் நகர, வட்டார காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். நகர தலைவர் ஐயப்பன் முன்னிலையில் வகித்தார்.
பார்லி., தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இளைஞர் காங்.,மாணவர் காங்., தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் தேர்தலில் விருதுநகர் தொகுதியை காங். கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சித் தொண்டர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. மகளிர் காங். நகரத்தலைவர் எலிசா நன்றி கூறினார்.

