/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., திருமுக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
/
ஸ்ரீவி., திருமுக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ஸ்ரீவி., திருமுக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ஸ்ரீவி., திருமுக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ADDED : ஜன 14, 2024 11:32 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளத்தில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிவகாசியை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் கவின்ராஜ் 17, பலியானார்.
சிவகாசி தாலுகா பழையபட்டியை சேர்ந்த முனியராஜ் மகன் கவின்ராஜ். இவர் மேல சின்னையாபுரம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று காலை தன்னுடன் படிக்கும் 5 நண்பர்களுடன் கவின்ராஜ், ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளத்தில் குளிப்பதற்காக வந்துள்ளார்.
காலை 10:50 மணிக்கு மாணவர்கள் 6 பேரும் திருமுக்குளத்தின் கிழக்கு கரையில் இருந்து நடுவில் உள்ள கல் மண்டபத்திற்கு நீச்சல் அடித்து செல்லும்போது, மாணவர் கவின்ராஜ் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார். 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.