/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு கரும்பு
/
ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு கரும்பு
ADDED : ஜன 14, 2024 05:05 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு டிராபிக் போலீசார் கரும்பு கொடுத்து அசத்தினர்.
அருப்புக்கோட்டையில் இருசக்கரம் ஓட்டும் வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணிந்து வருவதில்லை. இது குறித்து டிராபிக் போலீசார் பல முறை விழிப்புணர்வு மற்றும் எச்சரித்தும் அலட்சியப்படுத்தி ஹெல்மெட் அணியாமல் வந்து அதற்குரிய அபராதமும் கட்டுகின்றனர்.
முன்பு, டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, பாராட்டி ஸ்வீட் கொடுத்துள்ளார். நேற்று, காந்தி நகர், பந்தல்குடி ரோடு சந்திப்பு சிவன் கோயில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் நின்று ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி பாராட்டி அவர்களுக்கு கரும்பு கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

