ADDED : ஜன 19, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி வலையங்குளத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் 44, சக்திவேல் 23. முருகனின் தம்பி மகளை சக்திவேல் உறவினர் காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் முடித்தார்.
இதனால் இரு தரப்பினருக்குமிடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரில் நடந்த விளையாட்டுப் போட்டியின் போது இரு தரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். சக்திவேல், செல்வராஜ், அருண் மீதும் முருகன், கண்ணன், குருநாதன் மீதும் மல்லாங்கிணர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

