ADDED : ஜன 21, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மல்லாங்கிணர் தங்கப்பாண்டியன் அரசு நினைவு கிளை நூலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட நூலக அலுவலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்டேவிட் சுதாகரன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் சங்கரவேலு, வாசகர் வட்ட தலைவர் இருதயம், நூலகர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஸ்ரீலதா ரூ. 3ஆயிரத்து 200 கட்டணம் செலுத்தி 160 மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை பெற்றார்.
நூலக அலுவலர் கிரகம் துரை நன்றி கூறினார்.

