/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துப்பாக்கியுடன் பிடிபட்ட சென்னை வாலிபர்: போலீசார் விசாரணை
/
துப்பாக்கியுடன் பிடிபட்ட சென்னை வாலிபர்: போலீசார் விசாரணை
துப்பாக்கியுடன் பிடிபட்ட சென்னை வாலிபர்: போலீசார் விசாரணை
துப்பாக்கியுடன் பிடிபட்ட சென்னை வாலிபர்: போலீசார் விசாரணை
ADDED : மார் 27, 2025 03:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பாணாங்குளம் கிராமத்தில் ஏர்கன் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் 24, என்பவரிடம் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பாணாங்குளத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு டூவீலரில் 2 பேர் சுற்றியுள்ளனர். சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மற்றொருவரை கிராமத்தினர் விசாரித்த போது அவரது பேன்ட் பையில் இருந்து ஒரு ஏர்கன் துப்பாக்கி கீழே விழுந்தது. கிராம மக்கள் கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், தப்பி ஓடிய மற்றொருவர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜான் என்பதும் தெரியவந்தது.
சிறை நண்பர்களான அவர்கள் கிராம பகுதிகளில் தனி வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தப்பி ஓடிய ஆரோக்கிய ஜானை போலீசார் தேடி வருகின்றனர். ராஜேஷிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.